தமிழ் சுருட்டு யின் அர்த்தம்

சுருட்டு

வினைச்சொல்சுருட்ட, சுருட்டி

 • 1

  விரிந்து அல்லது நீட்டிக்கொண்டு இருப்பதை உட்புறம் மடங்குமாறு வளைத்தல் அல்லது சுற்றுதல்.

  ‘எழுந்ததும் முதல் வேலையாகப் பாயைச் சுருட்டி வை’
  ‘கை கழுவுவதற்கு முன் சட்டைக் கையைச் சுருட்டி விட்டுக்கொண்டார்’
  ‘நாய் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது’

 • 2

  (உடம்பு, கை, கால் முதலியவற்றை) ஒடுக்கிக்கொள்ளுதல்.

  ‘குளிருக்குக் கிழவி உடம்பைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள்’

 • 3

  (பொருளை அல்லது பணத்தை) திருடுதல்.

  ‘திருடர்கள் வீட்டில் இருந்த பாத்திரம் பண்டம் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு போய்விட்டனர்’
  ‘வசூலான ஐயாயிரம் ரூபாயையும் அவர் சுருட்டிவிட்டதாகக் கேள்வி’

 • 4

  (கிரிக்கெட்டில் எதிர் அணியினரை) குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழக்கச் செய்தல்.

  ‘இந்திய அணி எதிர் அணியை நூற்றுப் பத்து ஓட்டங்களுக்குச் சுருட்டிவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவேயில்லை’

தமிழ் சுருட்டு யின் அர்த்தம்

சுருட்டு

பெயர்ச்சொல்

 • 1

  காகிதத்தால் சுற்றப்படாமல் (புகைபிடிப்பதற்காக) குழல்போல் சற்றுக் கனமாகச் சுருட்டப்பட்ட புகையிலை.

 • 2

  வட்டார வழக்கு சுருட்டிவைக்கப்பட்டிருப்பது.

  ‘பாய்ச் சுருட்டைப் பிரித்து ஒரு பாயை எடு!’
  ‘மண்டபத்தின் சமையலறையில் நிறைய வாழையிலைச் சுருட்டுகள் வைக்கப்பட்டிருந்தன’