தமிழ் சுருட்டை யின் அர்த்தம்

சுருட்டை

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (தலைமுடியைக் குறிக்கும்போது) பல நெளிவுகளைக் கொண்டிருப்பது.

  ‘அவனுக்கு முடி சுருட்டை’
  ‘குழந்தையின் சுருட்டைசுருட்டையான முடி பார்க்க அழகாக இருந்தது’

 • 2

  (நெற்பயிர், மிளகாய்ச் செடி முதலியவற்றின்) இலையை (சுருண்டுவிடுமாறு) பாதிக்கும் ஒரு நோய்.

  ‘சுருட்டை விழுந்தால் விளைச்சல் குறையும்’