தமிழ் சுற்றளவு யின் அர்த்தம்

சுற்றளவு

பெயர்ச்சொல்

 • 1

  வட்டம், கோளம் போன்ற ஏதேனும் ஒரு வடிவத்தின் வெளி விளிம்பின் மொத்த நீளம்.

  ‘பூமியின் சுற்றளவு ஏறக்குறைய 25000 மைல்’
  ‘இடுப்புச் சுற்றளவு தெரியாமல் கால்சட்டை தைக்க முடியாது’
  ‘இந்தத் தோட்டத்தின் சுற்றளவு ஆயிரம் அடி’

 • 2

  ஒரு இடத்தைச் சுற்றி சம தூரத்தில் உள்ள சுற்றுப்புறம்.

  ‘ஐந்து மைல் சுற்றளவுக்கு மருந்துக்கடைகளே இல்லை’