தமிழ் சுற்றிப்பார் யின் அர்த்தம்

சுற்றிப்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

 • 1

  (அமைச்சர், அதிகாரி போன்றவர்கள் ஒரு இடத்துக்குச் சென்று) பார்வையிடுதல்.

  ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சுற்றிப்பார்த்தார்’

 • 2

  (சுற்றுலா செல்லும்போது பல இடங்களை அல்லது ஒரு புதிய இடத்தின் எல்லாப் பகுதிகளையும்) சென்று பார்த்தல்.

  ‘பல நாடுகளைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு’
  ‘இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது’