தமிழ் சுறுசுறுவென்று யின் அர்த்தம்

சுறுசுறுவென்று

வினையடை

 • 1

  (கோபம், அழுகை முதலியவை வருவதைக் குறிக்கும்போது) சட்டென்று.

  ‘அவனைக் குறைசொன்னதும் அவனுக்குச் சுறுசுறுவென்று கோபம் வந்ததைப் பார்க்க வேண்டுமே!’
  ‘அப்பா திட்ட ஆரம்பிப்பதற்குள் தம்பிக்குச் சுறுசுறுவென்று அழுகை வந்துவிட்டது’

 • 2

  (வேலைகளைச் செய்வதில்) வேகமாக; சுறுசுறுப்பாக.

  ‘சுறுசுறுவென்று அவள் வேலை செய்யும் சாமர்த்தியம்’