தமிழ் சுழற்று யின் அர்த்தம்

சுழற்று

வினைச்சொல்சுழற்ற, சுழற்றி

 • 1

  (ஒன்றை) சுழலச் செய்தல்; சுற்றுதல்.

  ‘சாவிக் கொத்தைச் சுழற்றிக்கொண்டு வந்தான்’
  ‘தூக்கம் கண்ணைச் சுழற்றுகிறது’
  ‘பந்தை விதவிதமாகச் சுழற்றுவதில் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் வல்லவர்’

 • 2

  (நாலாபக்கங்களிலும்) சுற்றி வீசுதல் அல்லது ஆட்டுதல்.

  ‘கத்தியைச் சுழற்றியபடி கூட்டத்திற்குள் பாய்ந்தான்’
  ‘மாடு வாலைச் சுழற்றி முதுகின் மேல் இருந்த ஈக்களை விரட்டியது’