தமிழ் சுவீகரி யின் அர்த்தம்

சுவீகரி

வினைச்சொல்சுவீகரிக்க, சுவீகரித்து

 • 1

  சுவீகாரம் எடுத்துக்கொள்ளுதல்.

  ‘அவளுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் தன் தங்கையின் குழந்தையைச் சுவீகரித்துக்கொண்டாள்’

 • 2

  (கிராமங்களை அல்லது விளையாட்டு வீரர்களை ஒருவரோ ஒரு அமைப்போ) தத்தெடுத்தல்.

  ‘கால்பந்தாட்ட வீரர் ஒருவரைப் பிரபல வங்கி ஒன்று சுவீகரித்துக்கொண்டது’
  ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களைச் சுவீகரித்துக்கொள்ள ஒரு நடிகர் முன்வந்திருக்கிறார்’

 • 3

  (வேறொரு தன்மை, நிலை, கருத்து முதலியவற்றை ஒருவர் அல்லது ஒன்று தன்னுடையதாக) ஏற்றல்; தனக்குரியதாக ஏற்றுச் செயல்படுதல்; தழுவிக்கொள்ளுதல்.

  ‘நம் நாடு அந்நியக் கல்விமுறையை அப்படியே சுவீகரித்திருக்கிறது’