தமிழ் சுவடு யின் அர்த்தம்

சுவடு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பரப்பில் காலால் நடந்து சென்றதற்கான) பதிவு.

  ‘காட்டுப் பாதையில் புலியின் கால் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தன’

 • 2

  (ஒன்று நிகழ்ந்ததற்கான) அடையாளம்.

  ‘அவர் ஊருக்கு வந்து போனதற்கான சுவடுகளே இல்லை’
  ‘வந்த சுவடு தெரியாமல் கோபம் மறைந்துபோயிற்று’