தமிழ் சுவர் யின் அர்த்தம்
சுவர்
பெயர்ச்சொல்
- 1
(கூரையைத் தாங்குவதற்காக அல்லது பாதுகாப்புக்காக வீடு, கட்டடம் போன்றவற்றைச் சுற்றி) செங்கல் முதலியவற்றால் எழுப்பப்படும் செங்குத்தான அமைப்பு.
‘எங்கள் வீட்டுச் சுவரில் நிறைய புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும்’‘‘இங்கு விளம்பரம் செய்யாதீர்கள்’ என்று சுவரில் எழுதப்பட்டிருந்தது’ - 2
உடலில் அல்லது தாவர, விலங்கு செல்களில் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் சேர்க்கும் அல்லது பிரிக்கும் விதத்தில் சுற்றி அமைந்திருப்பது.
‘தமனிகளின் சுவர்கள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை’‘சல்லிவேர்களின் செல் சுவர் சவ்வுபோல் செயல்படுவதால் சவ்வூடு பரவல் நடைபெறுகிறது’