தமிழ் சுவாதீனம் யின் அர்த்தம்

சுவாதீனம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒருவரின்) சுய உணர்வு; பிரக்ஞை.

  ‘ஒருவர் சுவாதீனத்துடன் எழுதிக் கொடுத்த பத்திரமே செல்லும்’

 • 2

  (உடல் உறுப்புகள்) ஒழுங்காக இயங்கும் நிலை.

  ‘வலது காலும் இடது கையும் சுவாதீனம் இழந்து கஷ்டப்படுகிறார்’

 • 3

  அருகிவரும் வழக்கு சொத்துகளின் மீதான ஒருவரின் உரிமை.

  ‘எனக்கு சுவாதீனமான நிலத்தில் அவன் எப்படிப் பயிரிட முடியும்?’

 • 4

  (ஒருவருக்கே உரித்தான) சுதந்திரம்.

  ‘அவள் சுவாதீனமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள்’