தமிழ் சுவாரசியம் யின் அர்த்தம்

சுவாரசியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அல்லது ஒன்றைச் செய்ய ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் தன்மை.

  ‘அவர் பேச்சே ரொம்ப சுவாரசியமாக இருக்கும்’
  ‘கதையை சுவாரசியமாக நகர்த்துவது எப்படி என்று இயக்குநருக்குத் தெரியவில்லை’
  ‘பயணம் செய்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம்’

 • 2

  ஆர்வத்துடன் ஒன்றைச் செய்யும் தன்மை; ஈடுபாடு.

  ‘கதையை சுவாரசியத்துடன் படித்துக்கொண்டிருந்தார்’
  ‘பேச்சு சுவாரசியத்தில் நான் வந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை’