சுவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுவை1சுவை2

சுவை1

வினைச்சொல்சுவைக்க, சுவைத்து

 • 1

  (உணவு, தின்பண்டம் போன்றவற்றை ருசித்து) உண்ணுதல்; ருசி அறிதல்.

  ‘மலைத் தேனைச் சுவைத்திருக்கிறாயா?’
  ‘வெகு நாட்கள் கழித்துக் கிடைத்த வீட்டுக் காப்பியைச் சுவைத்துக் குடித்தான்’

 • 2

  (இனிமையான அல்லது இன்பம் தரும் ஒன்றை) அனுபவித்தல்; ரசித்தல்.

  ‘கவிதையைச் சுவைக்கச்சுவைக்கத்தான் அதன் பரிமாணங்கள் புலப்படும்’

 • 3

  (ஒன்று) விரும்பத் தக்கதாக இருத்தல்.

  ‘நான் ஆங்கிலத்தில் பேசியது அவருக்குச் சுவைக்கவில்லை என்றே கருதுகிறேன்’

சுவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுவை1சுவை2

சுவை2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உணவுப் பொருள்கள் முதலியன கொண்டிருப்பதும் நாவினால் உணரப்படுவதுமான தன்மை; (குறிப்பிட்ட) ருசி.

  ‘பாகற்காய் கசப்புச் சுவையுடையது’
  ‘காய்ச்சலால் நாக்கில் எந்தச் சுவையையும் உணர முடியவில்லை’
  ‘இந்தப் பானம் நான்கு சுவைகளில் கிடைக்கிறது’

 • 2

  (நாவுக்கு) இனிமையான உணர்வை அளிப்பது.

  ‘சாப்பாடு சுவையாக இருந்தது’
  ‘எங்கள் ஊர் ஆற்றுத் தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்’

 • 3

  சுவாரஸ்யம்.

  ‘எதையும் சுவையாகச் சொல்லக்கூடியவள்’
  ‘சுவையான விவாதம்’

 • 4

  நயம்.

  ‘கம்பராமாயணத்தில் காவியச் சுவை என்ற தலைப்பில் என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள்’
  ‘இலக்கியச் சுவை மிக்க கட்டுரை’

 • 5

  (இசை, கவிதை, நாட்டியம் போன்றவை வெளிப்படுத்தும்) உணர்ச்சி; ரசம்.

  ‘அவலச் சுவை நிரம்பிய நவீன நாடகம்’
  ‘பக்திச் சுவை மிக்க ஆண்டாளின் பாசுரங்கள்’