தமிழ் சூசகம் யின் அர்த்தம்

சூசகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்றை (நேரடியாக அல்லாமல்) ஊகித்து அறியும் வகையில் வெளிப்படுத்தும் முறை.

  ‘அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்பதை முதல்வர் சூசகமாகத் தெரிவித்தார்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒன்று இருப்பதன்) அறிகுறி.

  ‘மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்பதற்கான சூசகங்கள் தென்பட்டன’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (வெளிப்படையாக அல்லது நேரடியாகக் கூறாமல்) குறிப்பால் உணர்த்தும் பொருள்.

  ‘சமாதானப் பேச்சு வார்த்தை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பெரிதும் உதவும் என்றும் பரவலாகச் சூசகம் கூறப்பட்டது’