தமிழ் சூட்டோடுசூடாக யின் அர்த்தம்

சூட்டோடுசூடாக

வினையடை

  • 1

    முந்தைய செயலைச் செய்த வேகத்திலேயே அல்லது அது நடந்த வேகத்திலேயே; தொடர்ச்சியாக அல்லது உடனடியாக.

    ‘ஏன் வீணாக அந்தக் காரியத்தைத் தள்ளிப்போடுகிறாய்? சூட்டோடுசூடாக இப்போதே முடித்துவிடு!’
    ‘மனை வாங்கியாயிற்று. சூட்டோடுசூடாக வீடு கட்ட ஆரம்பித்துவிடுவோம்’