சூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சூடு1சூடு2சூடு3சூடு4

சூடு1

வினைச்சொல்சூட, சூடி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (தலையில் கிரீடம், மலர் போன்றவற்றை அல்லது கழுத்தில் மாலையை) அணிதல்.

  ‘தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம்’
  ‘மகளின் மாலை சூடிய மணக்கோலம்’

சூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சூடு1சூடு2சூடு3சூடு4

சூடு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தொட்டு அல்லது உணர்ந்து அறியும் அளவில் இருக்கும் வெப்பம்.

  ‘சூடான பால் தொண்டைக்கு இதமாக இருந்தது’
  ‘வெயிலில் மொட்டை மாடியின் தரை சூடு ஏறியிருந்தது’

 • 2

  சித்த வைத்தியம்
  (உடம்பில்) வெப்பத்தை அதிகரிக்கச் செய்வது.

  ‘பப்பாளி உடம்புக்குச் சூடு என்று சொல்வார்கள்’

 • 3

  (பேச்சைக் குறித்து வரும்போது) மனத்தில் தைக்கும்படியான தன்மை.

  ‘நான் அவனைத் திட்டியதும் அவனும் பதிலுக்குச் சூடாக என்னைப் பற்றிப் பேச, பிரச்சினை பெரிதாகிவிட்டது’
  ‘அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சூடான பதில் கொடுத்தார்’

 • 4

  (விவாதம், பிரச்சினை போன்றவற்றின்) தீவிரம்; காரசாரமான தன்மை.

  ‘மத மாற்றத் தடை சட்டத்தைப் பற்றி சட்டசபையில் சூடான விவாதம் நடைபெற்றது’
  ‘தேர்தலைப் பற்றிச் சூடாக விவாதித்துக்கொண்டிருந்தனர்’

சூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சூடு1சூடு2சூடு3சூடு4

சூடு3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (களத்துமேட்டில் ஒரு முறை அடித்த பிறகு குவித்துவைக்கப்பட்டிருக்கும்) மணிகள் கொஞ்சமாக இருக்கும் நெல் தாள்.

சூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சூடு1சூடு2சூடு3சூடு4

சூடு4

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு துப்பாக்கியால் சுடப்படுதல்.

  ‘இரவு சாப்பிட்டுவிட்டுத் தலைவாசலில் கதைத்துக்கொண்டிருந்தபோது சூட்டில் இறந்தார்’
  ‘எந்த நேரமும் சூட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது’