தமிழ் சூடு கொடு யின் அர்த்தம்

சூடு கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (ஒருவருக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில்) காட்டமாகப் பேசுதல் அல்லது எழுதுதல்.

    ‘அவன் அப்படிப் பேசியதற்கு அவனுக்குச் சரியான சூடு கொடுத்தீர்கள்’
    ‘தன்னுடைய விமர்சகர்களுக்கு இந்தப் பேட்டியின் மூலம் அவர் நன்றாகவே சூடு கொடுத்திருந்தார்’