தமிழ் சூடு போடு யின் அர்த்தம்

சூடு போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    பழுக்கக் காய்ச்சிய கம்பியை அல்லது எரியும் கட்டையை (தோல் வெந்துபோகும்படி) உடம்பில் வைத்து எடுத்தல்.

    ‘பண்ணையார் வீட்டு மாட்டுக்கெல்லாம் ‘X’ வடிவத்தில் சூடு போட்டிருப்பார்கள்’
    ‘சொன்னதைக் கேட்கவில்லை என்றால் சூடு போட்டுவிடுவேன் என்று அம்மா மிரட்டினாள்’