தமிழ் சூடேற்று யின் அர்த்தம்

சூடேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    (ஒருவரை) கோபமடையச் செய்தல்; ஆத்திரமூட்டுதல்.

    ‘யாராவது சூடேற்றினால் போதும், அவன் இப்படித்தான் கத்திக்கொண்டிருப்பான்’
    ‘பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பிரச்சினை பண்ணி அப்பாவைச் சூடேற்றிக்கொண்டிருப்பார்கள்’