தமிழ் சூடேறு யின் அர்த்தம்

சூடேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

  • 1

    (ஒருவருக்கு) ஆத்திரம் உண்டாதல்.

    ‘அவனைப் பற்றிப் பேசினாலே ஏன் உனக்கு இப்படிச் சூடேறுகிறது?’
    ‘அவன் முதலாளியை எதிர்த்துப் பேசியதைக் கேட்கக்கேட்க அவருக்குச் சூடேறியது’