தமிழ் சூட்சுமம் யின் அர்த்தம்

சூட்சுமம்

பெயர்ச்சொல்

 • 1

  மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்; நுட்பம்.

  ‘இந்த இயந்திரத்தின் சூட்சுமம் தெரிந்தால்தான் இதைப் பழுதுபார்க்க முடியும்’
  ‘சமைப்பதில் எவ்வளவோ சூட்சுமங்கள் இருக்கின்றன’

 • 2

  (பேச்சு, செயல் ஆகியவற்றில்) மறைவான உள்நோக்கம்; தந்திரம்.

  ‘தங்களைப் பிரிப்பதற்கான சூட்சுமம் இது என்று உணர்ந்து கொண்டாள்’

 • 3

  (கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இல்லாமல்) நுண்மையாக இருப்பது; பருப்பொருளின் நுண்ணிய வடிவம்.

  ‘சூட்சும சரீரம்’