தமிழ் சூட்டு யின் அர்த்தம்

சூட்டு

வினைச்சொல்சூட்ட, சூட்டி

 • 1

  (ஒரு பெயரை) இடுதல்; கொடுத்தல்.

  ‘அரசியல் மேடைகளில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது என்பது இப்போது அதிகரித்துள்ளது’
  ‘அந்தக் கட்டடத்திற்கு மறைந்த முதலமைச்சரின் பெயர் சூட்டப்பட்டது’

 • 2

  (ஒருவரைச் சிறப்பிக்கும் வகையிலோ கேலி செய்யும் வகையிலோ ஒரு பட்டம் அல்லது பட்டப் பெயர்) அளித்தல்.

  ‘அந்த நடிகருக்கு ‘திரை உலகத் திலகம்’ என்ற பட்டம் சூட்டப்பட்டது’
  ‘நெடுநெடுவென்று உயரமாக இருப்பதால் அவனுக்கு ‘கொக்கு’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்’

 • 3

  (மாலை, கிரீடம் முதலியவை) அணிவித்தல்.

  ‘குழந்தைக்குப் பூச் சூட்டி அழகுபார்த்தாள்’
  உரு வழக்கு ‘இந்தக் கட்டுரை பாரதியாருக்குச் சூட்டப்பட்ட புகழாரம் ஆகும்’