தமிழ் சூதாட்டம் யின் அர்த்தம்

சூதாட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம்.

  ‘பரம்பரைச் சொத்துகள் அனைத்தையும் சூதாட்டத்தில் கரைத்துவிட்டான்’
  ‘பருவ மழையைச் சார்ந்திருப்பதால் விவசாயமும் ஒரு சூதாட்டம்தான்’

 • 2

  (விளையாட்டின் முடிவு, பங்குகளின் விலை போன்றவற்றைத் தீர்மானிப்பதில்) சட்ட விரோதமான அல்லது முறைகேடான வழியில் ஈடுபடும் செயல்.

  ‘கிரிக்கெட் சூதாட்டத்தில் தான் ஈடுபட்டது உண்மைதான் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அணித்தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்’
  ‘கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணியில் பல பெருந்தலைகள் இருப்பதாக வதந்தி’