தமிழ் சூது யின் அர்த்தம்

சூது

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவரின் அல்லது ஒன்றின் நலனைக் கெடுக்கும் சூழ்ச்சி அல்லது தந்திரம்.

  ‘சூதே தெரியாத அப்பாவி மனிதர்!’
  ‘அவன் உடம்பெல்லாம் சூது!’

 • 2

  உயர் வழக்கு சூதாட்டம்.

  ‘ஒரு காலத்தில் குடி, சூது என்று இருந்தவர் இப்போது பொறுப்பானவராக மாறிவிட்டார்’