தமிழ் சூனியம் யின் அர்த்தம்

சூனியம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை; வெறுமை; வெற்றுவெளி.

  ‘சூனியத்திலிருந்து ஏதாவது தோன்ற முடியுமா?’
  ‘வாழ்க்கையே சூனியமாகிவிட்டதுபோல் உணர்ந்தாள்’
  ‘சூனியமான அவள் நெற்றியைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது’
  உரு வழக்கு ‘உன்னைப் போல் ஒரு அறிவு சூனியத்தை நான் பார்த்ததேயில்லை’

தமிழ் சூனியம் யின் அர்த்தம்

சூனியம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஒருவருடைய தலைமயிர், நகம், காலடி மண் ஆகியவற்றைக் கொண்டு) மந்திரத்தின் மூலம் பேய், பிசாசை ஏவி அழிவு ஏற்படுத்துவதாக நம்பப்படும் செயல்; பில்லி சூனியம்.

  ‘யாரோ சூனியம் வைத்துவிட்டதால்தான் தனக்குத் தீராத வயிற்று வலி வந்திருக்கிறது என்று பாட்டி புலம்பினாள்’