தமிழ் சூம்பு யின் அர்த்தம்

சூம்பு

வினைச்சொல்சூம்ப, சூம்பி

 • 1

  (கை, கால் முதலிய உறுப்புகள் நோய் காரணமாக) குச்சியாக மெலிதல்.

  ‘அவளது வலது கால் சூம்பியிருக்கிறது’

 • 2

  (முகத்தைக் குறிக்கும்போது) சிறுத்தல்.

  ‘தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிய பத்திரிகைச் செய்தியை வாசித்ததும் அவர் முகம் சூம்பிப்போய்விட்டது’

தமிழ் சூம்பு யின் அர்த்தம்

சூம்பு

வினைச்சொல்சூம்ப, சூம்பி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (விரல்) சூப்புதல்.

  ‘குழந்தை அதிகம் கை சூம்புகிறது’