தமிழ் சூரப்புலி யின் அர்த்தம்

சூரப்புலி

பெயர்ச்சொல்

 • 1

  (கேலியாகக் கூறும்போது) வீரம் அல்லது துணிச்சல் நிறைந்தவர்.

  ‘இருட்டிவிட்டால் வீட்டை விட்டு இறங்காத சூரப்புலி நீ!’

 • 2

  (பாராட்டும்போது) திறமை வாய்ந்தவர்.

  ‘வியாபாரத்தில் சூரப்புலி’
  ‘கணக்கில் சூரப்புலி’