தமிழ் சூறையாடு யின் அர்த்தம்

சூறையாடு

வினைச்சொல்சூறையாட, சூறையாடி

 • 1

  (ஒரு கூட்டம்) வன்முறையைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருக்கும் பொருள்களைக் கொள்ளையடித்தல்.

  ‘கொள்ளைக்காரக் கும்பல் நான்கு ஊர்களைச் சூறையாடியிருந்தது’
  உரு வழக்கு ‘பெண்களின் கற்பைச் சூறையாட நினைக்கும் கயவர்கள்’

 • 2

  கூட்டமாக வன்முறையில் ஈடுபட்டுப் பொருள்களை நாசமாக்குதல்.

  ‘கலவரத்தின்போது கடைத்தெருவில் இருந்த கடைகளும் வாகனங்களும் சூறையாடப்பட்டன’