தமிழ் சூழ யின் அர்த்தம்

சூழ

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (கூட்டமாக) பின்தொடர; பின்தொடர்ந்து வர.

  ‘கட்சித் தொண்டர்கள் சூழத் தலைவர் மேடைக்கு வந்தார்’
  ‘தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறேன்’

தமிழ் சூழ் யின் அர்த்தம்

சூழ்

வினைச்சொல்சூழ, சூழ்ந்து

 • 1

  (ஒருவரை, ஒன்றை, ஓர் இடத்தை) சுற்றி அமைதல்.

  ‘நிருபர்கள் அமைச்சரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர்’
  ‘தீவிரவாதிகள் இருந்த வீட்டை ராணுவம் சூழ்ந்தது’

 • 2

  (ஒரு இடத்தின் எல்லையாக ஒன்று) சுற்றிலும் அமைதல்/(பனி, மேகம் போன்றவை ஒரு இடத்தை) மூடுதல் அல்லது மூடியிருத்தல்.

  ‘இந்தியா மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது’
  ‘பசுமையான வயல்கள் சூழ்ந்த ஊர்’
  ‘பனி சூழ்ந்த மலைச் சிகரம்’
  ‘அறையில் இருள் சூழ்ந்தது’
  உரு வழக்கு ‘மனத்தில் பயம் சூழ்ந்தது’