தமிழ் சூழ்நிலை யின் அர்த்தம்
சூழ்நிலை
பெயர்ச்சொல்
- 1
(உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றால் உருவாகும்) நிலைமை/(ஒரு செயலின்) பின்னணி.
‘அரசியலைப் பொறுத்தவரை அவர் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்’‘வீட்டில் ஓர் இறுக்கமான சூழ்நிலை நிலவுவதை அவன் உணர்ந்தான்’‘பணத்தை உடனடியாகத் திருப்பித் தர முடியாத சூழ்நிலையை விளக்கி நான் எழுதியிருந்தேன்’‘குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இல்லை’‘தீபாவளிச் சமயம் பார்த்து அண்ணன் கடன் கேட்டு ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்’ - 2
ஒரு இடத்தைச் சுற்றி இயற்கையாக அமைந்திருக்கும் அமைப்பு/சுற்றியிருக்கும் இயற்கைப் பொருள்களின் தொகுதி; சூழல்.
‘அந்த ரம்மியமான சூழ்நிலை அவனுக்குப் பிடித்துப்போயிற்று’‘நூலகம் என்றால் அமைதியும் வெளிச்சமும் நிறைந்த சூழ்நிலையில் இருக்க வேண்டும்’‘ஒரே குப்பையும் கூளமுமாக வீட்டின் சூழ்நிலை இருக்கக் கூடாது’