தமிழ் செத்துச் சுண்ணாம்பாகு யின் அர்த்தம்

செத்துச் சுண்ணாம்பாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (பெரும்பாலும் விருப்பமில்லாத ஒன்றைத் தொடர்ந்து செய்வதால்) கடுமையாகச் சோர்வடைதல்.

    ‘ஒரு மாதமாக உறவினர்களுக்குப் பணிவிடை செய்தே நான் செத்துச் சுண்ணாம்பாகிவிட்டேன்’

  • 2

    (இருக்கும் இடம் தெரியாமல்) அழிந்துபோதல்.

    ‘நீங்கள் மட்டும் அப்போது உதவவில்லை என்றால், இந்நேரம் நான் செத்துச் சுண்ணாம்பாகியிருப்பேன்’