தமிழ் செதில் யின் அர்த்தம்

செதில்

பெயர்ச்சொல்

 • 1

  (மீன், ஓணான் போன்றவற்றின்) உடல்மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்கு.

 • 2

  மெல்லிய தகடு போன்ற துண்டு அல்லது கட்டி.

  ‘மாம்பழத்தைச் செதில்செதிலாகச் சீவினான்’
  ‘பிணவறையில் ஐஸ்கட்டிகள் செதில்செதிலாக வைக்கப்பட்டிருந்தன’

 • 3

  உயிரியல்
  மொட்டில் புல்லிவட்டத்துக்குக் கீழேயும், புதிதாகத் தோன்றிய இலையில் காம்புக்குக் கீழேயும் (அவற்றைப் பாதுகாப்பதற்காக) இருக்கும் சிறு தளிர் போன்ற பாகம்.

  ‘பூவடிச் செதில்’
  ‘இலையடிச் செதில்’

தமிழ் செதில் யின் அர்த்தம்

செதில்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு கறையான்.

  ‘கரடி தன் நகங்களால் புற்றைக் குடைந்து, வெளியே வரும் செதில்களை நக்கித் தின்னும்’