தமிழ் செதுக்கு யின் அர்த்தம்

செதுக்கு

வினைச்சொல்செதுக்க, செதுக்கி

 • 1

  (மரம், கல் முதலியவற்றுக்குக் குறிப்பிட்ட வடிவம் கொடுக்க) உளி போன்ற சாதனங்கள்மூலம் கொஞ்சம்கொஞ்சமாக வெட்டி எடுத்தல்.

  ‘கட்டையைச் செதுக்கி மண்வெட்டிக்குப் பிடி செய்தான்’

 • 2

  (சிற்ப சாஸ்திர முறைப்படி மரத்தில், கல்லில் குறிப்பிட்ட) உருவத்தை வடிவமைத்தல்; (சிலை) வடித்தல்.

  ‘இந்த அற்புதமான சிலையைச் செதுக்கிய சிற்பி யார்?’
  ‘கதவில் மயில் உருவம் செதுக்க வேண்டும்’
  ‘செதுக்கி வைத்தது போன்ற மூக்கு’
  உரு வழக்கு ‘இந்தத் திரைப்படத்தை நான் செதுக்கிச்செதுக்கி உருவாக்கியிருக்கிறேன்’

 • 3

  (புல், பூண்டு முதலியவற்றை மண்வெட்டி போன்றவற்றால்) மண்ணின் மேற்பரப்போடு ஒட்டி வெட்டுதல்.

  ‘செதுக்கிய புல்லை மண் இல்லாமல் உதறி மாட்டுக்குப் போடு’
  ‘பூந்தோட்டத்தை அழகாகச் செதுக்கிவைத்திருந்தார்கள்’