தமிழ் சென்ற யின் அர்த்தம்

சென்ற

பெயரடை

  • 1

    (காலத்தைக் குறிக்கும்போது) கடந்த/(புத்தகத்தின் அத்தியாயம், பக்கம் முதலியவற்றைக் குறிக்கும்போது) குறிப்பிடப்படுவதற்கு முன்னுள்ள; முந்தைய.

    ‘எனக்குத் திருமணம் சென்ற ஆண்டு நடந்தது’
    ‘சென்ற தேர்தலில் அவர் போட்டியிட்டார்’
    ‘இந்தத் தகவல் சென்ற அத்தியாயத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது’