தமிழ் செப்பனிடு யின் அர்த்தம்

செப்பனிடு

வினைச்சொல்செப்பனிட, செப்பனிட்டு

 • 1

  சரிசெய்தல்; பழுதுபார்த்தல்.

  ‘சாலையையும் பாலத்தையும் விரைவில் செப்பனிடக் கோரியுள்ளோம்’
  ‘இந்த இயந்திரத்தைச் செப்பனிட நிறைய செலவாகும்’

 • 2

  (நூலின் தரத்தை உயர்த்தும் வகையில்) திருத்துதல்; செப்பம் செய்தல்.

  ‘இந்த நூலைச் செப்பனிட்டு உதவிய நண்பர்களுக்கு நன்றி’