தமிழ் செப்பு யின் அர்த்தம்

செப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (குங்குமம் முதலியவை போட்டு வைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன) உள்ளங்கையில் அடங்கும் அளவுக்குச் சிறியதாக இருக்கும் கலன்; சிமிழ்.

 • 2

  மரத்தால் செய்து வண்ணம் பூசிய பாத்திரம் போன்ற விளையாட்டுச் சாதனம்.

  ‘பெண் குழந்தைகள் செப்பு வைத்து விளையாடுவார்கள்’

தமிழ் செப்பு யின் அர்த்தம்

செப்பு

பெயர்ச்சொல்

 • 1

  தாமிரம்; செம்பு.

  ‘தூத்துக்குடியில் செப்பு உருக்காலை ஒன்று உள்ளது’
  ‘செப்பால் ஆன திருமேனி’
  ‘அந்தக் காலத்தில் பித்தளை, செப்பு ஆகியவற்றில் நாணயங்களை அச்சிட்டனர்’
  ‘செப்புக் காசு’
  ‘செப்புத் தவலை’
  ‘செப்புக் கம்பி’