தமிழ் செய்கை யின் அர்த்தம்

செய்கை

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட விதத்தில் அமையும் ஒருவரின்) செயல்.

  ‘அவனுடைய செய்கை பலருக்கு ஆத்திரமூட்டியது’
  ‘அவனுடைய செய்கைக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது’
  ‘அவருடைய செய்கைகளெல்லாம் பாராட்டும்படியாக இருக்கின்றன’

தமிழ் செய்கை யின் அர்த்தம்

செய்கை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வேளாண்மை.

  ‘இந்த முறை செய்கையில் நல்ல விளைச்சல் இல்லை’
  ‘இம்முறை செய்கைக் காணியைக் குத்தகைக்குக் கொடுக்கப்போகிறேன்’