தமிழ் செய்தி யின் அர்த்தம்

செய்தி

பெயர்ச்சொல்

 • 1

  எழுத்து, பேச்சு போன்றவற்றின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப்படுவது.

  ‘பத்திரிகையில் வரும் செய்திகளைப் பார்த்தால் சமயத்தில் சிரிப்பு வந்து விடுகிறது’
  ‘செய்திகளை முந்தித் தர பத்திரிகைகளிடையே போட்டி’
  ‘அவனுக்கு வேலை கிடைத்த செய்தி எனக்குத் தெரியாது’
  ‘எல்லாக் காவல் நிலையங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது’
  ‘வேறு என்ன செய்தி?’

 • 2

  மின்காந்த அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அனுப்பப்படுவது அல்லது கணிப்பொறி போன்றவற்றில் சேமிக்கப்படுவது.

 • 3

  புலன்களின் மூலமாக மூளைக்கு அனுப்பப்படுவது.

  ‘வாயில் உணவு சென்றவுடன் அங்கிருந்து மூளைக்குச் செய்தி எட்டி மூளை சுரப்பிகளை இயங்கச் செய்வதால்தான் உமிழ்நீர் சுரக்கிறது’

 • 4

  கலைப் படைப்புகள் மூலம் தெரிவிக்கப்படும் கருத்து.

  ‘என்னுடைய எல்லாப் படங்களிலும் சமூகத்துக்கு என்று ஒரு செய்தி இருக்கும்’
  ‘‘எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்’ என்பதுதான் இந்தக் கவிதையிலிருந்து கிடைக்கும் செய்தி’

 • 5

  கிறித்தவ வழக்கு
  பிரசங்கம்.