தமிழ் செய்திக்குறிப்பு யின் அர்த்தம்

செய்திக்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காகப் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கும்) எழுத்து வடிவச் செய்தி.

    ‘புத்தாண்டை முன்னிட்டு அதிகமாகப் பேருந்துகள் விடப்படும் என்று போக்குவரத்துக் கழகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது’

  • 2

    சிறு விவரத் தொகுப்பு.

    ‘இதைக் கட்டுரை என்பதை விடச் செய்திக்குறிப்பு என்று கூறலாம்’