தமிழ் செய்நேர்த்தி யின் அர்த்தம்

செய்நேர்த்தி

பெயர்ச்சொல்

 • 1

  (செயலைச் செய்வதில்) ஒழுங்கு; நுணுக்கம்.

  ‘அவர் பட்டுப் புடவை நெய்தால் அதில் செய்நேர்த்தி இருக்கும்’
  ‘நகை செய்திருக்கிறார்களே ஒழிய, அதில் செய்நேர்த்தி இல்லை’

 • 2

  வட்டார வழக்கு (விவசாயத்திற்காக) நிலம் பண்படுத்தப்பட்ட நிலை.

  ‘செய்நேர்த்தியை எதிர்பார்த்து நிற்கும் நிலம்’