தமிழ் செய்முறைப் பயிற்சி யின் அர்த்தம்

செய்முறைப் பயிற்சி

பெயர்ச்சொல்

  • 1

    மாணவர்களைச் சோதிப்பதற்காகப் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப் பட்டியல்.

    ‘இந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப் பயிற்சியை நாளைக்குச் செய்துகொண்டு வர வேண்டும்’

  • 2

    (ஒரு செயல்பாட்டுக்குத் தேவையான) கருவிகள் கொண்டு நிகழ்த்திக் காட்டும் பயிற்சி.

    ‘இந்தப் பள்ளியில் செய்முறைப் பயிற்சி வகுப்பு நடத்துவதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை’