தமிழ் செயற்கை யின் அர்த்தம்

செயற்கை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது.

  ‘செயற்கை மழை’
  ‘செயற்கை ரப்பர்’
  ‘செயற்கை இழைத் துணிகள்’

 • 2

  இயல்பாக இல்லாதது; வலிந்து செய்வது.

  ‘அவள் செயற்கையாகச் சிரித்தாள்’
  ‘நாடகத்தில் அவருடைய செயற்கையான நடிப்பு எடுபடவில்லை’