தமிழ் செரி யின் அர்த்தம்

செரி

வினைச்சொல்செரிக்க, செரித்து

  • 1

    (உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்; ஜீரணமாதல்.

    ‘உண்ட உணவு செரிப்பதற்கு மூன்று மணி நேரமாவது வேண்டும்’
    உரு வழக்கு ‘வாங்கும் சம்பளம் செரிப்பதற்காவது வேலை செய்ய வேண்டாமா?’