தமிழ் செருமு யின் அர்த்தம்

செருமு

வினைச்சொல்செரும, செருமி

 • 1

  (தொண்டையில் தங்கியிருக்கும் எச்சில், சளி போன்றவை நீங்குவதற்காக) லேசாகக் கனைத்தல்.

  ‘அவர் லேசாகச் செருமிவிட்டுப் பேசத் தொடங்கினார்’
  ‘ஆடுகள் செருமிச்செருமி ஊளையை ஒழுகவிட்டுக்கொண்டிருந்தன’

 • 2

  வட்டார வழக்கு தேம்புதல்.

  ‘குழந்தை செருமிச்செருமி அழுதது’