தமிழ் செறி யின் அர்த்தம்

செறி

வினைச்சொல்செறிய, செறிந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிடப்படும் ஒன்று) நிறைந்திருத்தல்; அடர்த்தியாக அல்லது நெருக்கமாகக் காணப்படுதல்.

    ‘இருள் செறிந்திருக்கும் காடு’
    ‘மரம் செடிகொடிகள் செறிந்த மலையடிவாரம்’
    உரு வழக்கு ‘வீரம் செறிந்த மனிதர்கள்’