தமிழ் செல்லம் யின் அர்த்தம்

செல்லம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (குழந்தையிடம், தன்னைவிட வயது குறைந்தவரிடம், பிராணியிடம்) கொஞ்சும் விதத்தில் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் செயல்.

  ‘‘உன் பெயர் என்ன, கண்ணா?’ என்று கேட்டுவிட்டுக் குழந்தையின் கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்’
  ‘‘ஒட்டகம்’ என்பது நண்பர்கள் அவனுக்கு வைத்த செல்லப் பெயர்’
  ‘அப்பாவின் செல்லத்தில் நீ ஒழுங்காகப் படிப்பதுகூடக் கிடையாது’
  ‘செல்லக் கோபம்’

 • 2

  கொஞ்சல் நிறைந்த அன்புக்குப் பாத்திரமான நபர்; செல்லப்பிள்ளை.

  ‘என் செல்லத்துக்கு என்ன வேண்டும்?’
  ‘தங்கை அப்பாவின் செல்லம்’

 • 3

  கொஞ்சலாக ஒருவரை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘செல்லம், இங்கே வா. அப்பா என்ன வாங்கி வந்திருக்கிறேன் பார்!’

தமிழ் செல்லம் யின் அர்த்தம்

செல்லம்

பெயர்ச்சொல்-ஆக