தமிழ் செல்வம் யின் அர்த்தம்

செல்வம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு; சொத்து.

  ‘அவரிடம் இவ்வளவு செல்வம் இருந்து என்ன பயன்? பண்பு இல்லையே!’
  ‘செல்வத்தின் செழிப்பு அவர் உடலில் தெரிகிறது’
  உரு வழக்கு ‘கல்விச் செல்வம்’

 • 2

  ஒரு நாட்டில் (இயற்கையாக) அமைந்துள்ள மூல வளம்.

  ‘நாட்டின் செல்வங்களைப் பாதுகாப்பது மக்களின் கடமை’

 • 3

  குழந்தை.

  ‘உங்கள் செல்வங்களின் வளமான எதிர்காலத்துக்காகச் சேமியுங்கள்!’