தமிழ் செல்வாக்கு யின் அர்த்தம்

செல்வாக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால்) பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை.

  ‘தேர்தலில் அவர் தன் சொந்தச் செல்வாக்கிலேயே வெற்றிபெற்றுவிடுவார் என்று தோன்றுகிறது’
  ‘மாணவர்களிடம் தமிழ் ஆசிரியருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு’
  ‘வளர்ந்த நாடுகள் தம் செல்வாக்கைப் பயன்படுத்திப் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றன’

 • 2

  தாக்கம்.

  ‘தமிழ் மர்மக் கதைகளில் ஆங்கிலத் துப்பறியும் கதைகளின் செல்வாக்கைக் காண முடிகிறது’