தமிழ் செலவுவை யின் அர்த்தம்

செலவுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    செலவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்குதல்.

    ‘மகளுடைய திருமணம் அவருக்கு நிறையச் செலவுவைத்துவிட்டது’
    ‘அந்த மருத்துவர் இரத்தப் பரிசோதனை, மருந்து மாத்திரை என்று ஏகத்துக்குச் செலவு வைத்துவிட்டார்’