தமிழ் செழிப்பு யின் அர்த்தம்

செழிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பயிர் முதலியவை) வளத்துடன் காணப்படும் நிலை.

  ‘பச்சைப்பசேலென்று இருந்த வயல்களின் செழிப்பு கண்ணுக்குக் குளிர்ச்சி தந்தது’

 • 2

  (பொதுவாக) வளத்துடனும் வளர்ச்சியுடனும் அமைந்த நிலை.

  ‘சகல விதங்களிலும் இது செழிப்பான ஊர்’

 • 3

  தட்டுப்பாடு இல்லாத நிலை; மிகுதி.

  ‘இந்த மாவட்டம் ஒரு காலத்தில் நீர்ச் செழிப்புடன் இருந்தது’
  ‘மழை செழிப்பாகப் பெய்ய வேண்டும்’

 • 4

  (உறுப்பின்) ஊட்டம்.

  ‘மாடுகளின் உடல் செழிப்பு தீவனத்தைப் பொறுத்திருக்கிறது’