தமிழ் செவிவழி யின் அர்த்தம்

செவிவழி

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (காலம்காலமாக) ஒருவர் கூற மற்றொருவர் கேட்டு இன்னொருவருக்குக் கூறுவது என்ற முறையில் வழங்கி வருவது.

    ‘என் தாத்தாவுக்கு ராமாயணம் செவிவழிப் பாடம்தான்’
    ‘இந்தச் செவிவழிக் கதை கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை’
    ‘இது செவிவழியாக வந்த கதை’